தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில், கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று (08.09.26) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மரு.பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர். கண் மருத்துவர் மற்றும் மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் ராஜலட்சுமி அவர்கள் கண்தானத்தின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, கண்தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.