தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பண்ணைப்புரம் தேவாரம் ஆகிய பேரூராட்சிகளில் பேரூராட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தேவாரம் பேரூராட்சியில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள கரும்பு வெட்டி ஓடை கால்வாயின் குறுக்கே புதியதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் பண்ணைப்புரம் பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்ததுடன் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்திற்கு சென்று மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும் உணவில் தரத்தன்மை குறித்தும் மாணவர்கள் சாப்பிடும் உணவை சாப்பிட்டு பார்த்து பார்வையிட்டதுடன் நல்ல முறையில் பராமரித்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்
இதனைத் தொடர்ந்து கோம்பை பேரூராட்சியில் ரூபாய் 118 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலக கட்டடப் பணிகளை பார்வையிட்டு கட்டப்பட்டு வரும் இந்த பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்க ஜமீன்தார்கள் வாழ்ந்த பகுதி என்பதால் அவர்களை நினைவு கூறும் வகையில் பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தினை அரண்மனை வடிவில் வடிவமைத்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார் இந்த ஆய்வில் பேரூராட்சி உதவி செய்ய பொறியாளர் அம்சா செயல் அலுவலர்கள் தேவாரம் பாலசுப்ரமணியன் கோம்பை சுருளி வேல் உதவி செயற்பொறியாளர் மணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்