தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் நமக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவமனையில் நமது திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிப்பது கிடையாது மருத்துவமனையில் பணத்தை வாங்கிக் கொண்டுதான் சிகிச்சை அளிக்கிறார்கள்.
ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளது ஒவ்வொரு அதிகாரிகளும் பரிந்துரை செய்ய வேண்டும் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரன் எந்த பணத்தையும் கொடுப்பது கிடையாது. அரசுக்கு தான் லாபம் ஒரு ஆளுக்கு 644 ரூபாய் மாதம் பிடிக்கிறார்கள். எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் சிகிச்சை பெற முடியவில்லை நமது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் நேற்று சட்டமன்ற நிகழ்ச்சி பார்த்தாலே நமக்கு நல்லாவே தெரியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எப்படி இருக்கு என்று கேட்டால் எப்போமோ நடந்த மிசா பற்றி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடந்ததை இப்போது சட்டமன்றத்தில் பேசுகிறார்கள்
தமிழகத்தில் நடக்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு இது பற்றி சட்டமன்றத்தில் கேட்டால் இது பற்றி பதிலளிக்க தமிழக ஆட்சியாளர்கள் பதிலளிக்க மறுக்கிறார்கள் இதுதான் தற்போது நடைபெறுகின்ற சட்டமன்றத்தில் நிகழ்வு நமக்கு இருப்பது ஒரே ஆயுதம் தான் அது வாக்குரிமை தான் என ஓய்வுதியதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள்.