அரியலூரில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்ட தலைவர் துரைவேலுசாமி தலைமை தாங்கினார்
மாவட்ட இணை செயலாளர் கட்டபொம்மன் அனைவரையும் வரவேற்று பேசினார் முன்னாள் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கபிலன் மாவட்ட துணைத்தலைவர் ராமசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புகழேந்தி மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் மாவட்ட இணைச்செயலாளர் சிவாஜி போக்குவரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பு சந்தானம் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார் மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகளை உடனே சரி செய்ய வேண்டும் காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது