​ஆனைமலை அன்னை மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் பங்குபெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.


​இலங்கையின் கொழும்பு ஸ்ரீ ராம் திருமண மண்டபத்தில் (Sri Raam Wedding Hall, Colombo), சர்வதேச யோகா ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன் (International Yoga Sports Federation) அமைப்பினால் நடத்தப்பட்ட 37-வது உலக யோகா கோப்பை 2026 (37th Amateur World Yoga Cup 2026) போட்டிகள் மிக விமரிசையாக நடைபெற்றன.


​இப்போட்டியில் ஆனைமலை அன்னை மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 43 மாணவர்கள் கலந்துகொண்டனர். 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் (Below 15 Category) பங்கேற்ற இவர்கள், தங்களின் அபார திறமையையும் கடின உழைப்பையும் வெளிப்படுத்தி அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பிடம் பெற்றனர். இதன் மூலம் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் (Overall Championship) பட்டத்தைக் தட்டிச் சென்று பள்ளிக்கும், இப்பகுதிக்கும், இந்திய நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளனர்.


​சர்வதேச அளவில் தங்களின் திறமையை நிரூபித்து சாம்பியன் பட்டம் வென்ற 43 மாணவர்களையும், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்த யோகா ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் திருமதி K. முத்துலட்சுமி அவர்கள் வெகுவாகப் பாராட்டி, வாழ்த்துகளையும் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *