தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் வங்கி மூலம் பெறப்பட்ட லோன் ஆணை வழங்கிய மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில் மாநகரில் உள்ள பல்வேறு சாலை யோரவியாபாரிகள் இதில் இன்னும் சேர வேண்டியது உள்ளது. முதலில் பதினைந்தாயிரம் ரூபாய் அதன்பிறகு 25 ஆயிரம் ரூபாய் அதன் பிறகு 50 ஆயிரம் ரூபாய் வங்கி மூலம் லோன் கொடுக்கப்படுகிறது.
9257 மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது 7593 பேருக்கு இதுவரைக்கும் மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு வங்கி மூலம் லோன் கொடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ள இடம் அனுமதி இல்லாது இடம் என்று ஒதுக்கப்பட்டுள்ளது அந்த இடங்களில் தான் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க வேண்டும்.வி.இ. ரோட்டில் எந்த கடைக்கும் அனுமதி கிடையாது. முத்து நகர் கடற்கரையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அங்கு 50 வியாபாரிகள் உள்ளன ர்.
நீங்கள் தொழில் செய்து முன்னேற வேண்டும் கந்துவட்டியோ அல்லது கூடுதல் வட்டிக்கு வாங்கி நீங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் சாலையோர வியாபாரிகளுக்கு இதுபோல அடையாள அட்டை வழங்கப்பட்டு வங்கி மூலம் லோன் வழங்கப்படுகிறது. கேரி பை எண்பது சதவீதம் ஒழிக்கப்பட்டுள்ளது ஆனால் 20 சதவீதம் கேரிபை விற்பனை தொடர்கிறது பக்கீல் ஓடையில் கேரிபை தொடர்ந்து வருகிறது 53 பூங்காக்கள் உள்ளது
அந்த பூங்காக்கள் முன்பும் இரண்டு கடைகள் மூன்று கடைகள் சாலையோர வியாபாரிகள் அமைத்துக் கொள்ளலாம். கேரிபையை நீங்கள் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது அனுமதிக்காதீர்கள். தூத்துக்குடியில் முடியாதது ஒன்றும் கிடையாது பிளாஸ்டிக் பொருட்கள் கேரிபை தடை செய்யப்பட்டது தான் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு நேபாளம் ஒரு உதாரணம். பேருந்து நிலையம் முன்பு சாலையோர வியாபாரிகளுக்கு கடை அனுமதி கிடையாது
கடைகளை அப்புறப்படுத்த சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நான் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையோர வியாபாரிகள் அனுமதி இல்லாத இடத்தில் பெரிய கடைகள் முன்பு கடைகளை மறித்து சாலையோர வியாபாரிகள்கடைகள் அமைக்க கூடாது..
உங்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை கடந்த நாலரை வருட காலத்தில் எடுத்து வருகிறது என்று மேயர் ஜெகன் பேசினார். விழாவில் 200க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு இன்று மட்டும் ஒரே நாளில் அடையாள அட்டை மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் வழங்கினார். அதுபோல 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் லோன் பெறுவதற்கான ஆணையும் மேயர் ஜெகன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.