கோயம்புத்தூர் கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைர நகை பிராண்டான ‘கீர்த்திலால்ஸ்’ ஷோரூமில், ‘சிந்தூரம்’ என்ற புதிய மணப்பெண் நகை சேகரிப்பு மிகக் கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


மலர்கள், செம்பருத்திப் பூக்கள் மற்றும் மயில்கள் போன்ற இயற்கை எழிலைக் கருப்பொருளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள், உயர்தர இயற்கை வைரங்கள், வண்ணக் கற்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களின் நேர்த்தியான சேர்க்கையில் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற ‘2026 ரீடெயில் ஜூவெல்லர் இந்தியா’ விருதைத் தட்டிச்சென்ற இந்த பிரத்யேக ‘சிந்தூரம்’ கலெக்ஷன் குறித்து, கீர்த்திலால்ஸ் ரீடெயில் விற்பனை பிரிவு துணைத் தலைவர் ரகுநாத் கூறுகையில், மணப்பெண்களின் கற்பனைத்திறன் மற்றும் இயற்கையின் அழகை ஒன்றிணைக்கும் நோக்கிலேயே இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,

கோயம்புத்தூர் மக்களுக்கு இதனை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
1939-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமிக்க முன்னணி வைர நகை பிராண்டாகத் திகழும் கீர்த்திலால்ஸ், இந்த விருது பெற்ற படைப்புகளைக் கோவை கிராஸ்கட் சாலை ஷோரூமில் பொதுமக்கள் மற்றும் நகை ஆர்வலர்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *