அரியலூர் ஆசிரியருக்கு தமிழ் சுடர் விருது லயன்ஸ் சங்கம் வழங்கியது பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் ஆசிரியர் தின தமிழ் சுடர் விருது வழங்கும் விழா தஞ்சாவூரில் நடந்தது ஆசிரியர்தினம் அரிமா அப்துல்லா தலமை தாங்கினார் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சி குழு உறுப்பினர் ரமேஷ்மாரி அனைவரையும் வரவேற்று பேசினார் இந்த விழாவில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 3242 F உள்ளடங்கிய சங்கங்களில் இருந்து 206 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 196 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் தின தமிழ் சுடர் விருது வழங்கப்பட்டது
இதில் தேர்வு பெற்ற அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஆ சண்முகம் அவர்களுக்கும் தமிழ் சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது அரிமா மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமிசண்முகவேல் திருச்சி உருமுதனலட்சுமி கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் தமிழருவி மனோன்மணி லயன் சங்கங்கள் கூட்டு மாவட்ட தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் தஞ்சாவூர் முகம்மதுரபி ஆகியோர் விருது பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்தி பேசினார்கள்
அரியலூர் ஆசிரியர் ஆ சண்முகம் அவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது நிர்வாகிகள் ஸ்டாலின் ராஜன் மற்றும் முன்னாள் மாவட்ட லயன் சங்க ஆளுநர்கள் ஆசிரியர்களை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள் இந்த விழாவில் தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்க தலைவர் வடிவழகன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர் விழா குறித்து கேள்விப்பட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் நிறுவனத் தலைவர் அரியலூர் நல்லப்பன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் அனைத்து தமிழ் சுடர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் அரிமா சங்க நிர்வாகிகளுக்கும் தமிழ் சுடர் விருது பெற்ற ஆ சண்முகம் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்