கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கூமாட்டி செட்டில்மென்ட் பழங்குடியின மக்கள் இன்று திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அந்த ஆர்ப்பாட்டத்தின் போது வனப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 18 கிராம பழங்குயின மக்களுக்காக உள்ள 600 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டும் பணியை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு தொடங்கி ஆமை வேகத்தில் அப்பணி நடைபெற்று வந்ததாகவும் இதனால் வனப்பகுதியில் குடியிருப்பு இல்லாமல் புதர்களிலும், பாறை குகைகளிலும் பெரும் சிரமத்துடன் குடியிருந்து வருவதாகவும் மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் இதுவரை செய்து கொடுக்கவில்லை என்றும் இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்
மேலும் அந்த மலை கிராமங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற்று வரும் அரசு உதவித்தொகையை பெற டாப்சிலிப் என்ற பகுதிக்கு நெடுந்தூரம் பயணம் செய்து அதற்காக மூன்று தினங்கள் கால விரயமும் பணவிரயமும் செய்யவேண்டி உள்ளதாகவும் பெரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்
எனவே தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளனர் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.பரமசிவம் நிர்வாகிகள் கே.மணி, அம்மாசை மற்றும் பலர் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்