தூத்துக்குடி: அதிமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி டுவிபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளர் ஜெய் கணேஷ், எஸ்.பி. சண்முகநாதனுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து, வீரவாள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், வட்ட செயலாளர்கள் நவாஸ், த. ஜெயக்குமார், ரெங்கன், ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் மெஜுலா, சந்திரா, செல்லப்பா, மாணவரணி நிர்வாகி ரியாஸ், ஐடி விங் அனுஷா, பால ஜெயம், சகாயராஜ், சாம்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அனைவரும் எஸ்.பி. சண்முகநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.