இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பாட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில்
பள்ளிக்கு கல்வி சீர் எடுத்து வரும் விழா நடைபெற்றது .
இந்த விழாவிற்கு பட்டதாரி ஆசிரியர் வேத லட்சுமி வரவேற்புரை வழங்கினார் பள்ளியின் தலைமையாசிரியர் தனஞ்செழியன் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகவேல் பள்ளி மேலாண்மை குழு தலைவர் லட்சுமி யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் நாராயணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி சார் ஆலோசனைகளையும் கல்விச் சீர் எடுத்து வந்த ஊர் பொதுமக்களையும் வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான எழுது உபகரணங்கள் நாற்காலிகள் தண்ணீர்குடங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்வில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் அவர்களை அனைவரும் பாராட்டி பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சீர்மிகு ஆசிரியர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
திரளான பொதுமக்கள் பங்கேற்று பள்ளி செயல்பாட்டில் தன்னை இணைத்துக் இந்த கொண்ட நிகழ்வு வெகுவாக பாராட்டப்பட்டது ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் இளைஞர்கள் என திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் நிகழ்வின்
இறுதியில் தமிழ் ஆசிரியர் தனசேகர் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்