கோவை பி.எஸ்.ஜி.மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இயக்குனர் டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன் மற்றும் மருத்துவகுழுவைசேர்ந்த டாக்டர்கள் பாவை, கார்த்திகேயன்,மற்றும் வருண் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

சிறு வயது குழந்தைகள் உணவுப் பொருட்களான வேர்கடலை, பட்டாணி, பாதாம், சிக்கன், எலும்புதுண்டு, பழங்களின் விதைகள், சிறு கற்கள் ஆகியவற்றை சாப்பிடும் போதோ அல்லது வாயில் வைத்து விளையாடி கொண்டிருக்கும் போதோ தவறுதலாக அத்தகைய பொருட்கள் அவர்களுக்கு தெரியாமலேயே மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சிக்கி விடுவது வாடிக்கையாக இருப்பதாகவும், இது போல நேரங்களில் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டியது அவசியம் என தெரிவித்தனர்…

இதனால்,எந்தவித அறுவை கிசிச்சையுமின்றி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நவீன தொழில் நுட்பம் வாயிலாக மூச்சுக்குழாயில் சிக்கிய உணவுப் பொருட்களை கண்டறிந்து அகற்ற முடியும் என தெரிவித்தனர் குறிப்பாக சமீபகாலமாக பலருக்கு மூச்சுக்குழாய், நுரையீரலில் பொம்மை பேட்டரி, ஊசிகள், நாணயங்கள், நிலக்கடலை, விதைகள் போன்ற பொருட்கள் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்..

இதற்கு சாப்பிடும் போது பேசுவது,குழந்தைகளுக்கு தரமில்லாத விளையாட்டு பொருட்களை கொடுப்பது உள்ளிட்ட காரணங்கள் சுட்டிய காட்டிய மருத்துவ குழுவினர்,இது போன்ற சூழ்நிலைகளில், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளதாக தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *