கோவையில் மாணவர்களின் அறிவியல் திறன்களை ஊக்கப்படுத்த புதிய ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம்

அரசுப் பள்ளியில் ரூ.1.8 கோடியில் அமைக்கப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு கோவையில் அரசுப் பள்ளியில் ரூ.1.8 கோடியில் அமைந்த ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்…

கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை நிதியுதவியின் கீழ் ரூ.1.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கலந்து கொண்டு ஆய்வகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். மாணவர்கள் புதிய ஆய்வகங்களை முழுமையாகப் பயன்படுத்தி, செய்முறைப் பயிற்சிகள் மூலம் அறிவியல் அறிவை வளர்த்துக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

புதிய கட்டிடத்தில் கணினி, வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்களின் அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் திறன் வளர்ச்சிக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது விழாவில் மாணவர்களின் கல்விச் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன. மேலும், இப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *