கோவை மாவட்டம் வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனின் 69 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு வால்பாறை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

வால்பாறையில் உள்ள காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற திமுக உறுப்பினர் குட்டி என்ற ஆ.சுதாகர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர், அதிமுக நகர துணைச்செயலாளர் பொன் கணேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் கல்யாணி, நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.செந்தில்குமார், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில் முருகன், புதிய தமிழகம் நகர செயலாளர் அமிர்தராஜ், ஒன்றிய செயலாளர் தனசிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில தலைவர் கோவை பொன்னன், புதிய தமிழகம் தொழிற்சங்க தலைவர் பால்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மேத்யூ , வெள்ளியங்கிரி, மற்றும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *