தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பின்பு செய்தியாளர்களிடம் மார்க்கண்டேயன் எம் எல் ஏ கூறுகையில் 2000 கன அடி தண்ணீர் வர வேண்டிய இடத்தில் 200 கன அடி தண்ணீர் தான் வந்து கொண்டிருக்கிறது

இது தொடர்பாக கூட்டத்தில் பேசினேன் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராக இருக்கின்றனர் தண்ணீர் இல்லை விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் தண்ணீர் கூடுதலாக திறந்து விட வேண்டும் விவசாய மக்கள் கடுமையான பாதிப்பில் உள்ளனர்.

ஏற்கனவே நாம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உயர் நீதிமன்றம் 15 நாட்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது 5 கோடி ரூபாய் நீர் நிலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற ஆனால் அதற்கான நடவடிக்கையை இன்று வரை எடுக்கப்படவில்லை கருவேல மரங்களை நீர் நிலையில் உள்ளது அப்புறப்படுத்தினால் வெள்ளம் வந்தால் ஒரு ஆயிரம் கோடி ரூபாயை மிச்ச படுத்தலாம் தமிழக அரசு இதுவரை பணிகளை துவக்கவில்லை இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் இடமும் கூறியுள்ளேன். நாடே கஷ்டத்தில் உள்ளது என்று மார்க்கண்டேயன் எம் எல் ஏ செய்தியாளர்களிடம் கூறினார்.


ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில் தூத்துக்குடி மாநகரம் 10 சென்டிமீட்டர் மழை வந்தாலும் அதனை தாங்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து உள்ளது வெளியில் இருந்து மழைக்காலத்தில் வரக்கூடிய வெள்ள நீரை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் மறவன் மடம் அருகில் ஒரு கல்வெட்டு மழை நீர் வரக்கூடிய பகுதியில் ஆக்கிரமித்து செய்யப்பட்டுள்ளது அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூட்டத்தில் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *