தென்காசி : செப் – 12
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார், கல்லூரியின் நிர்வாக இயக்குனர் கனக பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ் தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. தொடர்ந்து வரவேற்பு நடனமும் அதன் பின் தமிழரின் பாரம்பரிய முறைப்படி அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு துறை மாணவி பாத்திமா பர்வீன் வரவேற்புரை ஆற்றினார்.மாணவி ஷெர்லின் தேவ காருண்யா ஆசிரியர்களை பற்றிய சிறப்பு உரையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ். எம். ஏ.கல்லூரி குழுமங்களின் செயலர் மற்றும் முதல்வர் முனைவர். மகேஸ்வரி பேசும்போது தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்களிடம் மாணவ மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆசிரியர்கள் தங்களுக்கு கூறும் அறிவுரைகள் தங்களின் எதிர்கால வாழ்விற்கானது என நேர்மறையான சிந்தனையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எளிய முறையில் விளக்க உரையாற்றினார்.தொடர்ந்து விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்
உள்ளிட்ட அனைவருக்கும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.இவ் விழாவின் இரண்டாவது அமர்வாக குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியின் உதவி பேராசிரியர் முனைவர் அல்தாஜ் பேகம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. தொடர்ந்து கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் துறை வாரியான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி மகாதேவி விழாவிற்கு வருகை புரிந்து அனைவருக்கும் நன்றி கூறினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.