தேனி மாவட்டம் தேனி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் சேகரமாகும் கழிவுகள் நான்கு வகையாக தரம் பிரிக்கப்பட்டு ஈர கழிவுகள் பொம்மைம கவுண்டன்பட்டி வாட்டர் டேங்க் ,பழைய கம்போஸ்ட் ,மேற்கு சந்தை ,புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுறக்கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஈர கழிவுகள் இயந்திரங்கள் மூலம் 10mm-ல் இருந்து 30 mm வரை சிறு துகள்களாக வெட்டப்பட்டு அவை அங்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டப்பட்டு திறன்மிகு நுண்ணுயிர் திரவம் தெளிக்கப்பட்டு 45 நாட்கள் தொட்டியில் கிளறி பராமரித்தால் 46 வது நாள் உரமாக மாறிவிடும் அவ்வாறு மாறும் உரம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது

இந்நிலையில் மேற்படி உழவர் சந்தையில் சேகாரமாகும் காய்கறி கழிவுகளை பிரித்து வழங்குவதை அதிகப்படுத்தும் நோக்கிலும்,உரத்தினை அனைவரும் பயன்படுத்த ஏதுவாக நகராட்சி ஆணையர் செல்வி எஸ். பார்கவி உத்தரவின் பேரில் தேனி உழவர் சந்தையில் இலவச உரம் வழங்கும் மையம் செயல்பட தொடங்கியது .

மேற்படி நிகழ்வில் நகராட்சி நகர் நல அலுவலர் கவி பிரியா சுகாதார அலுவலர் செபஸ்டின் சுகாதார ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன் அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தோட்டக்கலை வீட்டுத்தோட்டம் மற்றும் விவசாய பணிகளுக்கு இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அளவு இயற்கை உரத்தினை எவ்வித கட்டணமின்றி முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *