சென்னை, எர்ணாவூர் – சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராகேஷ் என்ற ஜஸ்டின் பேபி(வயது 29) ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த7 ம் தேதி மணலியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது. அவரை மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்த இருவர் மணலி – ராஜி தெருவில், ராகேஷை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.
படுகாயமடைந்த ராகேஷை,அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த மணலி போலீசார், ரவுடியை கத்தியால் வெட்டி தப்பிய திருவொற்றியூர், பலகை தொட்டி குப்பத்தைச் சேர்ந்த தீபக் என்ற பாலா, வயது. 20.. கார்த்திக் என்ற குள்ள கார்த்திக், வயது.25 .மற்றும் மூன்று சிறுவர்களை, நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் புழல் சிறையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ராகேஷை வெட்டி .கொல்ல முயன்றுள்ளனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்மூன்று சிறுவர்கள் சீர்த்திருத்தப் பள்ளியிலும் மற்ற இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *