தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து குண்டடம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் விலகி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதன்படி, குண்டடம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே. பன்னீர்செல்வம், குண்டடம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பி. சிவபாலன், குண்டடம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி. செல்வப்பிரகாஷ், குண்டடம் வடக்கு ஒன்றியம், காடையூர் கிளை துணை அமைப்பாளர் வி. பரணிபிரசாத் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஏ.பி.ஆர். செல்வகுமார், கழக செய்தித் தொடர்பாளர் பொங்கலூர் இரா. மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிமுகவில் இணைந்த தவெக நிர்வாகிகளை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அன்புடன் வரவேற்றார்.

மேலும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே. பானுமதியை வெற்றி பெறச் செய்ய தீவிரமாக பணியாற்றுவதாக, தவெகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *