அரியலூர் அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது அரியலூர் பெருமாள் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் திங்கட்கிழமை துவங்கியது இந்த விழா தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறுகிறது

கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட கொடி மரத்தில் கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார் அவர்களால் கருடகொடி ஏற்றப்பட்டு பிரம்மோற்சவ விழா துவங்கியது மங்கள வாத்தியங்கள் முழங்க பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

தினந்தோறும் மாலையில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது விழா நடைபெறுவதை ஒட்டி கோவில் கோபுரம் மாடவீதிகள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு விழா கோலம் பூன்ட்டுள்ளது இந்து அறநிலையத்துறை ஸ்ரீநரசிம்மர் ட்ரஸ்ட் ஆகியவைகள் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *