ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி ரயில்வே ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வணிக சங்கத்தினர் நன்கொடையில் நடத்தும் 12ஆம்ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மூலப் பிள்ளையார் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது
முன்னதாக நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் விநாயகர் சிலை நன்கொடையாக வழங்கும் பொம்மிடி பலூன் திரையரங்கு உரிமையாளர் MF.ரமேஷ் அவர்கள் மற்றும் அழகரசன் பழக்கடை BRM.மாதேஷ் அவர்களுக்கு ரயில்வே ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்பட்டது
இந்நிகழ்ச்சியில் இரயில்வே ஆட்டோ சங்க தலைவர் மணிவண்ணன் ஆட்டோ சங்க செயலாளர் ராஜேந்திரன் ஆட்டோ சங்கர் பொருளாளர் ஈஸ்வரன் ஷாஜகான் ராஜகணபதி வெங்கடாசலம் முருகேசன் சண்முகம் ராஜேந்திரன் சந்துரு தரணி விஜயராகவன் அஜயராகவன் சக்தி கணேசன் நாகராஜ் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒளி அண்ட் ஒலி அமைத்துக் கொடுத்த ஐயப்பன் சந்துரு போன்றவர்கள் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்