புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் 6 ஆவது முறையாக வெற்றி பெற்ற புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்களுக்கு மூன்று அடி உயரமுள்ள வெள்ளியினால் செய்யப்பட்ட செங்கோலினை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அ.அன்பழகன், சமூக நலத்துறை அமைச்சர் வே.பொ.சிவக்கொழுந்து ஆகியோர் வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் செயலர் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவர்கள் ப.திருநாவுக்கரசு, நா.கோதண்டபாணி, பொருளர் மு.பாலசுப்பிரமணியன், துணைச் செயலர் பொறிஞர் மு.சுரேசு குமார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முனைவர் இரா.அருள்ராசு,கலைமாமணி எம்.எஸ்.ராஜா, செயந்தி இராசவேலு, அ.சிவேந்திரன், கவிஞர் ஆனந்தராசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். முன்னதாக நாதஸ்வர இசை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.