தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
.
தாராபுரம்,
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அஇஅதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
வேங்கிபாளையம் அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் V.C. ஹரிஹரமூர்த்தி தலைமையில், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் P. சத்யபாமா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அஇஅதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில், வேங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த V.C. ஹரிஹரமூர்த்தி – அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர், H. ஜாஸ்மின் – மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர், P. தங்கவேல் – கிளைக் கழகச் செயலாளர், இடையகிணறு பகுதியைச் சேர்ந்த G. சதீஷ்குமார் – மாணவர் அணி ஒன்றியச் செயலாளர், குப்பாங்கபுதூரைச் சேர்ந்த A. சம்பத் – கிளைச் செயலாளர் ஆகியோர் அஇஅதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் P. சத்யபாமாவை வெற்றி பெறச் செய்வதற்காக தீவிரமாக பணியாற்றுவோம் என, அஇஅதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிர்வாகிகள் உறுதியளித்தனர்.