கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 37-வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றன.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் டேக்வாண்டோ சங்க தலைவரும் ஆன ஐசரி கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற போட்டிகளுக்கான தொடக்க விழா, கோயம்புத்தூர் மாவட்ட டேக்வாண்டோ சங்க தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சிஜுகுமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க பொதுச்செயலாளர் செல்வமணி, திண்டுக்கல் மாவட்ட சங்க சேர்மன் கமலஹாசன், தலைவர் சர்வாகன் பிரபு,மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கோதண்டன், மனோகர், சுரேஷ்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பூம்சே மற்றும் கிரோகி ஆகிய இரு பிரிவுகளில், வீரர், வீராங்கனைகளின் வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் வீரர், வீராங்கனைகள் வேகம், உடல் கட்டுப்பாடு, துல்லியம் மற்றும் தற்காப்புத் திறனை வெளிப்படுத்தி தங்களது திறமையை நிரூபித்தனர்.
இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் அடுத்து நடைபெற உள்ள தேசிய அளவில் பங்கேற்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ள டேக்வாண்டோ விளையாட்டின் மீது தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்,
குறிப்பாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, தமிழகத்தில் டேக்வாண்டோ விளையாட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில், டேக்வாண்டோ சங்க மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஜோதி பாசு,நடராஜன்,எஸ்ரா ஸ்டாலின்,ஜகதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்…