5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்..! கோவை ரத்தினபுரியில் வியக்கவைக்கும் 9½ அடி விநாயகர் தரிசனம்….
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை ரத்தினபுரி பகுதியில் இந்து முன்னணி சார்பில் 9½ அடி உயரமுள்ள கஜமுக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விநாயகர் சிலைக்கு பல்வேறு மலர்கள் மற்றும் அலங்காரப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த நிலையில், பக்தர்களை கவரும் வகையில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த அலங்காரத்தை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் மொத்தம் 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கோவையில் தொடர்ந்து 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதாக இந்து முன்னணி மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால் தெரிவித்தார். விழா நாட்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் திருவிழா சூழல் நிலவி வருகிறது.
இதில்
ரத்தினபுரி நகர பொதுச்செயலாளர் சங்கர் ,மணி, கௌதம் ,பாஜக மாவட்ட பொறுப்பாளர் ரத்தினபுரி சுதாகர்,பாஜக ஓபிசி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.