தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மருதிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராக்கிஅம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கிழக்கில் தீர்த்தமலை, மேற்கில் காவிரி, வடக்கில் தென்பெண்ணை, தெற்கில் சேர்வராயன் குன்றுகள் சூழ்ந்த தகடூர் மண்ணில் அமைந்துள்ள இக்கோயில், கிராம மக்களின் குலதெய்வமாகவும், கிராம தெய்வமாகவும் விளங்குகிறது. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் துலாம் லக்னத்தில் வேத ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் மருதிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் குடியார்கள், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.