தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே பெட்டகாளிபாளையம் விநாயகர் கோவில் அருகே இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெட்டகாளிபாளையத்தைச் சேர்ந்த மோகன்குமார் (17) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, சுரேந்தர் மற்றும் தினேஷ் ஆகிய 3 பேர் அவரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் மோகன்குமாரின் இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காயமடைந்த அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மோகன்குமார் அளித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசார் மூர்த்தி, சுரேந்தர், தினேஷ் ஆகிய 3 பேர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *