நீர் வளத்தையும், மீன்வளத்தையும் காக்கும் முயற்சியில் நாகை இளைஞர் – பதிநான்கு ஆண்டுகளுக்கு மேல் களிமண் வைக்கோல் கொண்டு செய்யபடும் பிள்ளையார் சிலை
நாகப்பட்டினம், செப்:-14 நாகை மாவட்டம் இந்துக்களின் முக்கிய பண்டிகையான வினாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடபடும் வேலையில் திருமருகல் வள்ளுவர் தெருவை சேர்தவர் செ. ரஞ்த்குமார் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்
சிலர் பிளாஸ்டா பாரிஸ் செய்யபடும் வினாயகர் சிலையை நீர் நிலையில் கரைவதற்கு பலமாதங்கள் ஆகும் நிலையில், மீன்வளம், நீர்வளம் பாதிப்பு உண்டாகும், நிலைமை உள்ளது இதற்க்கு மாற்றாக ரஞ்சித்குமார் களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு பிள்ளையார் சிலை செய்துவருகிறார்,எளிதில் கரையும், மீன்களுக்கும், நீர்நிலைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது,இரண்டு அடிமுதல் ஆறு அடிவரைக்கும் பிள்ளையார் செய்து தொலைக்காட்சியில் வெளிவந்து பாராட்டுகளை பெற்றவர் என குறிப்பிடதக்கது