திருவண்ணாமலை
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர், தி.மு.க. சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கழக மருத்துவ அணியின் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.டி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைதி ஊர்வலமாகச் சென்ற கழகத்தினர், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.