மன்னார்குடி., செப். 15-
பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமை வகித்தார். முன்னதாக, கோபாலசமுத்திரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேரடியில் இருந்து அதிமுகவினர் பேரணியாக புறப்பட்டனர். பேரணியில் கட்சி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், வார்டு செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி ருக்குமணிபாளையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை அருகே சென்றடைந்தது. அங்கு முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சிவா. ராஜமாணிக்கம், குடவாசல் பாப்பா சுப்பிரமணியம், உதயகுமாரி தமிழ்க்கண்ணன், மேற்கு ஒன்றியச் செயலாளர் கா. தமிழ்ச்செல்வம், நகரக் கழக நிர்வாகி ஆர்.ஜி. குமார், அம்மா பேரவைச் செயலாளர் பொன் வாசுகிராம், மகளிர் அணிச் செயலாளர் டி. சுதா அன்புசெல்வன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கழக முன்னோடிகள், வார்டு செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், பல்வேறு பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்று பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுகவினர் திரளாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.