S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
காரைக்கால்:
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் காளிதாசன், கலைமணி, ஜீவானந்தம், பேராசிரியர்கள் சுந்தர், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.