தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார் தலைமை வகித்தார் செயற்குழு உறுப்பினர் அய்யர் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் சாந்தி முன்னிலை வகித்தனர் இந்த
விழாவில் தேனி தென்மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டு அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பேசியது
பேரறிஞர் அண்ணா தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தலைவராவார். எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும், சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டும், கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
தமிழ் மொழி, தமிழர் உரிமை, சமூகநீதி, ஏழை-எளிய மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அண்ணா ஆற்றிய பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் அழியாதவை. ஆட்சி என்பது மக்களுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த அரசியல் நெறியை உருவாக்கியவர் அண்ணா.
அண்ணா உருவாக்கிய கொள்கைகளையும், அவர் கண்ட கனவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்ணாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசினார்.
விழாவில்
தலைமைக் கழக பேச்சாளர் அபுதாஹிர் நகரக் கழக பொறுப்பாளர் சுப்பிரமணிகம்பம் நகர செயலாளர் சதீஷ்பொறுப்பாளர் அபுஉள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்