அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட வேண்டும் தமிழ்நாடு அரசு முத்தரப்பு வாரிய கமிட்டியை உடனே அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் ராஜாஜி நகர் நலவாரியம் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம் செல்வராஜ் தலைமை தாங்கினார்
சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் பி துரைசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார் சிற்றம்பலம் ஆதிலட்சுமி பெரியாக்குறிச்சி கொளஞ்சி முகமது யூசுப் திருமானூர் எஸ் பி சாமிதுரை சுத்தமல்லி கோவிந்தராஜ் பொன்னம்மாள் மணக்குடையான் பெரியசாமி உட்பட ஏராளமானோர் பேசினார்கள் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது