காரைக்கால்,செப்.16-காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-2) அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

11 கே.வி கீழகாசாகுடி மின்பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 17.09.2026 (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பி.கே.சாலை, எம்.எம்.ஜி நகர், எம்.எஸ்.பி நகர், அருண்சங்கர் நகர், ஆரிப் மரைக்கார் நகர், வி.ஜி நகர், நித்தீஸ்வரம், ஷா கார்டன், ராஜாத்தி நகர், வேட்டைக்காரன் தெரு, சில்வர் சாண்ட், குடிசைமாற்று வாரியம், காமராஜர் சாலை விரிவாக்கம், பாரதியார் சாலை (புதிய பேருந்து நிலையம் முதல் டோபி காலனி வரை) ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


S.செய்யது தாஜூல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *