ஓடும் ஆட்டோவில், பெண்ணுக்கு பிரசவ வலி, பெண் குழந்தை பிறந்தது.
சென்னை,பழவேற்காட்டை சேர்ந்தவர்கள் சுந்தர்(35), எல்.என்.டி ஒப்பந்த ஊழியர், இவர் மனைவி கீர்த்தி(20), நிறை மாத கர்ப்பிணி,இவருக்கு, கடந்த 13ம் தேதி அன்று சீமந்தம் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன் தினம் கீர்த்திக்கு, கடும் பிரசவ வலி ஏற்பட்டது.சென்னை, ஆர்.எஸ், ஆர், எம் மருத்துவமனைக்கு செல்வதற்கு, ஆட்டோ பேசினர். ஜெயசந்திரன் ஆட்டோ ஓட்டி வந்தார்.
அவரது ஆட்டோவில், கீர்த்தி மற்றும் உறவினர்கள் ஏறினர். எண்ணூர் மேம்பாலம் பகுதியில் ஆட்டோ வரும்போது, கீர்த்திக்கு கடும் பிரசவலி ஏற்பட்டு, குழந்தை தலை வெளியே தெரிந்தது.
அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, கிர்த்திக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலம், மேல் சிகிச்சைக்காக, ஆர். எஸ். ஆர்,எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.