தூத்துக்குடி வடக்கு புதியம்புத்தூரில் பாஜக வர்த்தக பிரிவு சார்பில் சிறப்பு பூஜை, பொதுமக்களுக்கு லட்டு வழங்கல் புதியம்புத்தூர்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தகப் பிரிவு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதியம்புத்தூர் சிவன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் E. முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதியம்புத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், வர்த்தகப் பிரிவு கிழக்கு ஒன்றிய தலைவர் தேன்ராஜ், வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளர் திருமணி செல்வன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொதுச் செயலாளர் கதிரவன், ஒன்றிய பொருளாளர் மந்திரம், கல்வியாளர் பிரிவு கோயில் பிள்ளை, மூத்த உறுப்பினர்கள் ஆனந்தராஜ், பாலகிருஷ்ணன், ரத்தினகுமார் மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், கார்த்திக், சாம்ராஜ், பெரியசாமி, பாஸ்கர், முருகன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *