திருப்பூர்: பி.என்.ரோடு, சாந்தி தியேட்டர் அருகில் தமிழ் மாநில சிவசேனா அமைப்பு சார்பாக 23-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விதர்சன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விழாவிற்கு மாநில பொதுச் செயலாளர் கவி என்கிற எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து மக்கள் கட்சி மற்றும் அகில பாரத அனுமன் சேனா நிறுவனத் தலைவர் வி.எஸ்.ஸ்ரீதரன், சிவசேனா (ஷிண்டே அணி) மாநில துணைத் தலைவர் பூக்கடை எஸ்.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கிய வைத்தனர். உடன்
தமிழ் மாநில சிவசேனா பொறுப்பாளர்கள்
மாநில தலைவர் கோபி, மாநில செயல் தலைவர் ஜே.எம்.தண்டபாணிஉள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் .

இதில் ஏராளமான இந்து அமைப்பு தலைவர்கள், சிவசேனா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *