திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மூன்று நாட்களாக தனித்தனி யாகசாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று, மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி, மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.


ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ராஜவிநாயகர், ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ சுபத்ரா தேவி, ஸ்ரீ தீர்த்தகுல விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராகு கேது, ஸ்ரீ அகோர வீரபத்திரர், ஸ்ரீ முன்னோடியார், ஸ்ரீ கமலகண்ணி, ஸ்ரீ லாடசன்னாசி, ஸ்ரீ நல்லாரிவான், ஸ்ரீ முத்தால் ராவுத், ஸ்ரீ நடுகல் சூலம், ஸ்ரீ பலிபீடம் மற்றும் ஸ்ரீ துவார சக்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.


அதேபோல் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ வள்ளி–தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ கழுவுடையான், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ பலிபீடம் மற்றும் ஸ்ரீ துவார சக்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும், மன்னார்குடி வ.உ.சி. சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லப விநாயகர் கோவிலிலும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று கோவில்களிலும் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *