புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது இந்த தர்ணா போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மத்திய, மாநில, பொதுத்துறை மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் அனைத்து ஊழியர்களுக்கும் பணிக்கொடை, கம்யூட்டேஷன் உள்ளிட்ட முழு சலுகைகளுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும்,

ஓய்வூதிய விதிகள் செல்லுபடியாக்கல் சட்டம் 2025-ஐ திரும்பப் பெற்று, D.S. Nakara தீர்ப்பை நிலைநிறுத்த வேண்டும், ஒவ்வொரு ஊதியக் குழுவின் போதும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய திருத்தம் வழங்க வேண்டும், 8-வது மத்திய ஊதியக் குழுவின் பணிவரம்பில் தற்போதைய அனைத்து ஓய்வூதியர்களுக்கும், ஓய்வூதிய திருத்தம் வழங்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும்,

பஞ்சப்படியில் 50% ஐ ஊதியம்/ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும், 8-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அமலாக்கத்தில் ஏற்படும் தாமதத்தைக் கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணம் (Interim Relief) வழங்க வேண்டும்,

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட 18 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக காரை மாவட்ட பென்ஷனர்கள் சங்க தலைவர் அசோக் தலைமையில், காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், காரை மாவட்ட பென்ஷனர் சங்க கௌரவ தலைவர் கணபதி சுப்ரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன நிர்வாகிகள் தமிழ்வாணன், சந்தனசாமி, ஞானவேல், பென்ஷனர் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், நடராஜன், முகம்மது ஜெக்கரியா, கோபால், ஜீவானந்தம், விஸ்வநாதன், நச்சு பிள்ளை, காளியப்பன், கோபால்சாமி, கோவிந்தராஜ், காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியதாரர்கள் சங்க செயலாளர் வெங்கடாச்சலம், பென்ஷனர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
_

S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *