மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது அதிகா லையில் 4 மணி அளவில் 12ம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 5.45 மணி அள வில் குடங்கள் புறப்பாடு நடந்தது.காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங் கள், தங்க விமா னங்களுக் கும், 7.55 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேஸ் வரருக்கும் புனித நீர் ஊற்றி மகாகும்பாபி ஷேகம் நடைபெற்றது. அப்போது மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்தவர்களும்,கோவிலை சுற்றி இருந்த பக்தர்களும் பரவசமானார்கள். கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றிய பிறகு தீபாராதனை காட்டப் பட்டது.


கும்பாபிஷேகத்தை காண நேற்று இரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர் ஆடி தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பக்தர் கள் குவிந்தனர்.கோவி லைச்சுற்றி வீதிகளிலும்,சித்திரைவீதி களிலும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். கோவிலைச்சுற்றி அமைந்துள்ள வீடுகள் வர்த்தக நிறு வனங்களின் மாடியில் பக்தர்கள் ஏறி நின்று கும்பாபிஷேகத்தை காண காத்திருந்தனர்.


இது தவிர கோவிலுக்குள் செல்ல, கோபுரம் அருகே செல்பவர்களுக்கு சிறப்பு பாஸ்கள் வழங்கப் பட்டிருந்தன. அவர்கள் நள்ளிரவு முதலே கோவிலுக்குள் அதற்கென ஒதுக் கப்பட்ட வழிகளில் அனுமதிக்கப்பட்டனர்.


கோவிலில் நான்கு ராஜ கோபுரங்கள், உள் பிரகார கோபுரங்கள் தங்கக் கோபு ரங்கள் அனைத்தும் மாவிலை,மலர் மாலைகள் , பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டு சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதிக்கொண்டிருந்தனர்.


யாகசாலையிலிலும் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதிலிருந்து புனிதநீர் அனைத்து கோபுர கலசங்களுக்கும் எடுத்து செல்லப் பட்டன. சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து காலை 7.35 மணிக்கு அனைத்து கோபுரங்களுக் கும் ஒரே நேரத்தில் சிவாச் சாரியார்களின் வேத மந்தி ரங்கள் முழங்க பக்தர்களின் கோஷம் விண்ணதிர கும்பா பிஷேகம் பின்னர் மூலவர் மீனாட்சி அம்மன் சன்னதி விமான கலசத்திற்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேஸ்வரர் சன்னதி விமான கலசத்திற்கு காலை 8.20 மணிக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடை பெற்றது. அதன் பிறகு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடந்தது.

அப்போது மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் கோவில் மேல் தளங்கள் மற்றும் கோவிலை சுற்றி திரண்டிருந்த லட்சக்க ணக்கான பக்தர்கள் மீனாட்சி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது டிரோன் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை பக்தர்கள் ஏற்றுக்கொண்ட னர். இதனைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் கோவிலுக்குள் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

இன்று கோவில் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து ள்ளது. கும்பா பிஷேகத்தை அருகில் இருந்து காண முடியாத பக்தர்கள் நலன் கருதி இரவு 7 மணிக்கு 4 மாசி வீதிகளி லும் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கி றார்கள். பாதுகாப்பு பணியில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 6,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *