தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்.
மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா மாலை அணிவித்து மரியாதை – பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், திமுக வேட்பாளர் சுகன்யா, ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, தேர்தல் பணிமனை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வேட்பாளர் சுகன்யா மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தாராபுரம் திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நடைபெற்றது.