புதுச்சேரி செப்.17: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கனூர் கூனிச்சம்பட்டு ஏரிக்கரையில் சுமார் 5,000 பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பனை விதை நடவு பணியை தொடங்கி வைத்தார்.
கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த தனிகாசலம், முருகன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபிள் சொசைட்டி சார்பில் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன், வண்டிமுத்து, எழிலரசன், வாண்ரப்பேட் பிரவின் மற்றும் சரோஜா அறக்கட்டளை சார்பில் ஸ்டீபன் ராயப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.
மேலும், 125 நாள் பணியாளர்கள் பங்கேற்று, ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு செய்யும் பணியை மேற்கொண்டனர். பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.