தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, புதிய ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான 2 நாள் சிறப்பு முகாம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது இந்த முகாமுக்கு
தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியது

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றி வருகிறேன். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 15-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் துறைவாரியாக அனுப்பப்பட்டு, அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது ரேஷன் கார்டு தொடர்பான பல்வேறு பணிகளுக்காக இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் பொது மக்களின் வசதிக்காக நாளை வெள்ளிக்கிழமையும் நடைபெறும். எனவே கம்பம் நகர பொதுமக்கள் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்

முகாமில், மாவட்ட இணை செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அய்யர், ரீட்டா, அபுதாஹிர், நகர செயலாளர் சதீஷ், தொகுதி செயலாளர் செந்தில்குமார், தனிச்செயலாளர் ரகுபதி, நேர்முக உதவியாளர்கள் ஹசீப், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *