அரியலூரில் தொமுச பேரவை கவுன்சில் ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் சிறப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது திருச்சி பெல் நிறுவன பொதுச் செயலாளர் தீபன் தலைமை தாங்கினார்
தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் மகேந்திரன் முன்னிலை வகித்தார் தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் பி வி அன்பழகன் அனைவரையும் வரவேற்று பேசினார்
பாஜக அரசு மாநில தவெக அரசுகளை கண்டித்து வருகிற 22 9 2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக அனைவரும் கலந்து கொள்வது இதில் அனைத்து தொமுசவினரும் கலந்து கொள்ள வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் 44 சட்டங்களை 4 சட்டங்களாக திருத்தியதை கண்டிப்பது அனைத்து துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இதில் தொமுச மாவட்ட கவுன்சில் இணை செயலாளர் டாஸ்மாக் சங்கர் மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் அய்யாதுரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் மாவட்ட பொருளாளர் திருஞானசம்பந்தம் அனைவருக்கும் நன்றி கூறினார்