பரமத்திவேலூரில் ரூ.48.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை பயன்பாட்டிற்கு வழங்கி, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் , பரமத்தி பழைய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தில் ரூ.6.52 இலட்சம் மதிப்பீட்டிலும் கோட்டம் மற்றும் வட்டார ஒருங்கிணைந்த சமூக சேவை மையங்கள் என ரூ.86.73 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பரமத்தி வட்டம், பரமத்தி ஊராட்சி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் திட்டத்தின் கீழ் ரூ.48.12 கோடி மதிப்பீட்டில் 424 புதிய குடியிருப்புகள் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி வைத்தார்.

முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் அனைத்து நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இப்புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளன. மேலும், ஒரு அலகில் தரை தளத்தில் 4 வீடுகள், முதல் தளத்தில் 4 வீடுகள் என 53 அலகுகளில் 424 குடியிருப்புகள் கட்டப்படவுள்து.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைசெல்வி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *