கோவை மெட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டா விற்பனை மையத்தில் , அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் நவீன வாகனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பு வாகனக் கண்காட்சி செப்டம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில் இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ஸ்ரீ திவ்ய நாமானந்தா சாமிகள் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார்..

நிகழ்ச்சியில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன்,ஆனமலைஸ் குழுமங்களின் சி தலைவர் காளிச்சாமி,.இ.ஓ.யுவராஜன்,விற்பனை பிரிவு துணை தலைவர் சிவராமன்,
முதன்மை வர்த்தக அதிகாரி கண்ணன், ராமகிருஷ்ணா வித்யாலாய தொழில் பயிற்சி மையத்தின் முதல்வர் முரளி,மற்றும் முன்னால் டீன் மரகதம் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்..

இந்தக் கண்காட்சியில் டொயோட்டா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கலப்பின வாகனத் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால வாகனத் தொழில்நுட்பங்களை பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், டொயோட்டா நிறுவனத்தின் பல்வேறு வகையான வாகனங்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன், வாகனங்களை ஓட்டிப் பார்க்கும் வசதி, சிறப்பு சலுகைகள், குடும்பத்தினருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன..

கண்காட்சியின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்காக ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்வும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எதிர்கால கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டும் நிகழ்வும் நடைபெறுகிறது.

செப்டம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறும் எனவும் கண்காட்சியை காண விரும்புவோர், முன்பதிவு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *