
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரம், பொது அறிவு, தமிழ் மற்றும் ஆங்கில மொழித் திறன், நடப்பு நிகழ்வுகள், அறிவியல், வரலாறு, விளையாட்டு, அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் தினமும் குறைந்தபட்சம் இரண்டு தமிழ் நாளிதழ்கள், ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு வார இதழ், ஒரு மாத இதழ் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், இதற்காக பள்ளிக்கல்வித் துறை மூலம் தனி நிதி ஒதுக்கீடு செய்து ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் நியூஸ் பேப்பர் ஸ்டாண்ட் அமைத்து, தினமும் காலை வழிபாட்டு கூட்டத்தில் 15 நிமிட செய்தி வாசிப்பு மற்றும் விவாத நேரம் ஒதுக்கி, மாணவர்களை TNPSC, UPSC, TRB, SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு சிறு வயதிலிருந்தே தயார்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கிராம மேம்பாடு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் நிறுவனர் அறவாழி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.