அரியலூர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் சங்கத்தின் 27 ஆம் ஆண்டு விழாவும் 80 வயது மற்றும் 85 வயது நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு பாராட்டு விழாவும் சங்கம் நிர்ணயித்த வளர்ச்சி நிதியை விட கூடுதலாக நிதி வழங்கிய உறுப்பினர்களை கௌரவப்படுத்தும் விழா ஆகிய முப்பெரும் விழா அரியலூரில் நடந்தது சங்கத்தின் வட்டார தலைவர் சி தங்கராஜ் தலைமை தாங்கினார்
சுப்ரமணியன் அய்யாவீரராகவன் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார் மரியம்மாள் ஆண்டு வரவு செலவு அறிக்கை வாசித்தார் மாநில துணைத்தலைவர் இரா முருகேசன் திமா கணேசன் மாவட்ட துணைத்தலைவர் டி ரவிச்சந்திரன் மாவட்ட கருவூல அலுவலர் சுரேஷ் குமார் கூடுதல் கருவூல அலுவலர் சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் சங்க வளர்ச்சிக்கு கூடுதலாக நிதி வழங்கிய ராமராஜூ உள்ளிட்டோருக்கு சால்வை நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது டி ரவிச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி மனோகர் பச்சமுத்து உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர் பெரம்பலூர் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை மருத்துவர்களால் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது