தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திராவிட கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கழகம் சார்பில் பெரியார் நடை (PERIYAR WALK) என்னும் பெரியார் நடைப்பயணம் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு காலை 6:30 மணிக்கு தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட திராவிட கழக தலைவர் விடுதலைநீலமேகன் அவர்கள் தலைமையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாநில பொருளாளரும் அரியலூர் மாவட்ட தலைவருமாகிய ஜெயராமன் அவர்களும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் பொதுச் செயலாளர் இராஜேந்திரன் அவர்களும் திராவிட கழக மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.

பெரியார் நடையை கோல்டன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் கண்மணி அவர்கள் நடைபயணத்தினுடைய அவசியத்தையும் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துக்கூறி நடைபயணத்தை தொடங்கி வைத்தார்கள். திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்கள்

. நடை பயணத்தை மாநில பகுத்தறிவாளர்களாக அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திச் சென்றார். நடைபயணம் மார்க்கெட் தெரு பெரம்பலூர் சாலை பொன்னுசாமி அரண்மனை தெரு வழியாக பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு நிறைவு பெற்றது. நடை பயணத்தை வாழ்த்தி பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் திருமழபாடி அல்லி அவர்கள் வாழ்த்தி பேசினார்கள். நிறைவாக பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் நடராஜன் அவர்கள் நடைபயணத்தை நிறைவு செய்து வைத்தார்கள். திராவிடர் கழக மாநில மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்களும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்களும் நடை பயண நண்பர்களும் பங்கேற்று நடைபயணத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *