தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஆதி மதனகோபால், இவர் ஒரு சமூக ஆர்வலர். இந்த வங்கியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறுசேமிப்பு மற்றும் வங்கி கணக்கு வைத்து பராமரித்து வருகிறார். பட்டுக்கோட்டை கூட்டுறவு வங்கி நகரில் லிமிட் நிறுவனத்தில் கடந்த 10.01.2024 ம் தேதி 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, 18.09.2026 ம் தேதி அன்று கடன் தொகை முழுவதும் கட்டி முடித்து விட்டார். இந்நிலையில் நேற்று (18.09.26) ஆதி மதனகோபால் வாங்கிய கடனுக்கு ஜாமீன் போட்டுக் கொடுத்த அவரது நண்பரின் வீட்டிற்கு சென்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள், ஆதி மதனகோபால் வாங்கிய கடன் தொகையை கட்டவில்லை என்றும் ஜாமின்தார் நீங்கள் தான் பொறுப்பு என்றும் அவரிடம் கூறியுள்ளனர்.

கடந்த அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலத்தில் பட்டுக்கோட்டை கூட்டுறவு வங்கியில், தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகள் வைத்து மோசடி செய்யப்பட்டது, வங்கி ஊழியர்கள் அவர்களது உறவினர்கள் பெயரில் வங்கி கணக்கு வைத்து, அவர்கள் பெயரில் லோன் எடுத்து மோசடி செய்தது உள்பட நிறைய மோசடிகள் நடைபெற்றதாக பல்வேறு தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டு நாளிதழ்களில் செய்தி வந்து பரபரப்பு ஏற்படுத்தியதை குறிப்பிட்டு தான் கட்டிய பணம் எந்த வகையில் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதி மதனகோபால் வங்கி மேலாளர் இடம் புகார் கொடுத்துள்ளது பட்டுக்கோட்டை பகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டுறவு வங்கியின் ஊழியர்கள் பெரும்பாலும் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் விஜய் அரசியலுக்கு அவ பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், நான் கட்டி முடித்த வங்கி கணக்கை கட்டி முடிக்கவில்லை என்று என்னிடம் கேள்வி கேட்பதன் மூலம் நான் தமிழக அரசுக்கு எதிராக போராட்டமோ ஒரு விமர்சனமோ சமூக ஆர்வலர்களை ஒன்று திரட்டி செய்வேன் என்றும் அதன் மூலம் தமிழக அரசு மீது அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று திட்டமிட்டு செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *